நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா இத்தாலியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரைத் திருமணம் செய்யவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அஞ்சனா ஹேண்ட்பேக் தயாரிக்கும் நிறுவனமொன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் இத்தாலியில் வசித்து வரும், தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் அஞ்சனா தனது காதலரை 13 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், இந்த காதல் இரு வீட்டாருக்கும் தெரியும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் நடந்துள்ளது எனவும், இதில் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தற்போதும் நடித்து வருகிறார். இவர் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.