சந்தையில் முட்டை விலை குறைந்துள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர்.
அதன்படி, முட்டை ஒன்றின் விலை தற்சமயம் 23 ரூபா முதல் 29 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், புத்தாண்டு பண்டிகை காலத்தில் முட்டைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன.
இதன்போது முட்டைகள் 47 ரூபா முதல் 50 ரூபா வரை விற்கப்பட்டன.
இந்த நாட்களில் முட்டைக்கான தேவை குறைந்துள்ளதால், முட்டை விலை குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.