நியூசிலாந்தின் மேற்கு கடற்கரையில் நேற்று(29) மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில், கடல் தளத்திற்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.