சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆகி இருந்தால் மலையக மக்களின் வாழ்வு மேம்பட்டிருக்கும் எனவே, உள்ளுராட்சிசபைத் தேர்தல் ஊடாக அவரின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
தலவாக்கலையில் இன்று (01.05.2025) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி காட்சிகள் இணைந்து நடத்திய மே தினக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது உண்மையை சொல்லியே சஜித் வாக்கு கேட்டதாகவும் பொய்களை கூறியே அநுர வாக்கு கேட்டார் எனவும் இறுதியில் பொய்தான் வென்றது எனவும் , இன்னும் ஒரு வருடத்தில் இந்த அரசாங்கம் ஆட்டம் காணும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.