ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் மே தின நிகழ்வு கட்சி தலைமையகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டீ சில்வா தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்
பொய்யை நிறுத்துவோம். வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் எனும் தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இதில் நாட்டின் பல பாகங்களில் இருந்து கட்சி உறுப்பினர்கள் மே தின நிகழ்வில் பங்கேங்பதற்காக வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது