எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், மேலும் 05 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (04) காலை 6 மணி முதல் இன்று (05) காலை 6 மணி வரையான 24 மணிநேரத்தில் இந்த கைதுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று வரை கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.
சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் 204 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், தேர்தல் சட்டங்களை மீறியதற்காக பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 46 ஆகும்.