கொட்டாஞ்சேனை சுமித்ராராம பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 17-18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் (16)இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 42 வயதுடைய நபரும், அவரது 70 வயதுடைய பாட்டியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சட்டத்தரணி மூலம் கொட்டாஞ்சேனை பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்த பின்னர், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.