ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலக BCCI முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள எமர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பையில் இருந்து விலகுவதாகவும் மின்னஞ்சல் மூலம் BCCI தெரிவித்துள்ளது.
ஆசிய கிரிக்கெட் சங்கத் தலைவராக பாக்கிஸ்தான் அமைச்சர் மொசின் நக்வி பதவி வகிக்கும் நிலையிலேயே இந்திய கிரிக்கெட் சபை இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக இந்த முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடந்த வருடம் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பைத் தொடரில் இந்தியா சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.