நைஜீரியாவில் வட கிழக்கு பகுதியில் 2 கிராமங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா, போகா ஹாரம் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்ற நிலையில் போகோ ஹாரம் எனும் குழு போர்னோ மாகாணம் மாளம் கராண்தி கிராமத்தில் திடீரனெ தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 23 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பெண்கள், சிறுமிகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கொள்ளை கும்பலால் கடத்திச் செல்லப்பட்டதுடன் மற்றொரு கிராமத்திலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 34பேர் .உயிரிழந்துள்ளனர்.
இந்த கிராமங்களிலும் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மொத்தம் 57பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.














