தென்னிந்திய முன்னணி திரைப்பட நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 𝐆𝐨𝐥𝐝 𝐑𝐨𝐮𝐭𝐞 மூனையத்தின் மூலமாக அவர் நாட்டை வந்தடைந்தார்.
இதன்போது, விமான நிலையத்தின் ஊழியர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராசி திரைப்படம் செப்டம்பர் 5, 2025 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு அதிரடி திரில்லர் திரைப்படமாகும்.
ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு அட்டவணையில் உள்ளது.
மதராசி குழு அடுத்ததாக இலங்கையில் படப்பிடிப்பை நடத்தும் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் சிவகார்த்திகேயனின் இந்த விஜயம் அமைந்துள்ளது.
மதராசி திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியில் இப்படம் தில் மதராசி என்ற பெயரில் வெளியாகிறது.
ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸின் தயாரிப்பு முயற்சியான மதராசியில் ருக்மணி வசந்த் கதாநாயகியாகவும், வித்யுத் ஜம்வால் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
அனிருத் ரவிச்சந்தர் இதற்கு இசையமைத்துள்ளனர்.