நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களில் 187 குடும்பங்களைச் சேர்ந்த 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தின் மாரவில மற்றும் சிலாபம் பகுதிகளில் நீரில் மூழ்கி நால்வர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், மன்னார் மாவட்டத்தில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 460 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் திருகோணமலை, புத்தளம் மற்றும் காலி மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 177 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.