இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரான அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொயிசா மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் கலாநிதி ஹர்ஷ் கப்ரால் ஆகியோரால் ஜனாதிபதியிடம் இந்த அறிக்கைகள் கையளிக்கப்பட்டன.
இலங்கையின் நிநி நிறுவனம் அல்லது வங்கியொன்று பெற்றுக்கொண்ட அதிகமான இலாபமாக இலங்கை வங்கி 106 பில்லியன்களை லாபமாக ஈட்டியுள்ளதென இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொய்சா இதன்போது தெரிவித்தார்.
இந்த இலாபம் வரி அறிவிப்புக்கு முன் பெற்றுக்கொண்டதென சுட்டிக்காட்டிய தலைவர், வர்த்தக அபிவிருத்தி, சிறு மற்றும் மத்தியத்தர தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நிதி நிறுவனங்கள் வரிசையில் இலங்கை வங்கி முதன்மை நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.