வெள்ளவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க இதனை அறிவித்தார்.
கொழும்பில் உள்ள ஹேவ்லாக் சிட்டி வீட்டுத் தொகுதியின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி தொடர்பாக 40 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்கள் செவ்வாய்க்கிழமை (20) கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.