இந்தியாவின் தெலங்கானாவில் நடைபெற்று வரும் 72வது ‘உலக அழகி போட்டியில்’ Head-to-Head Challenge பிரிவில் 107 அழகிகளில் இருந்து இறுதி 20 பேருக்குள் இலங்கையை சேர்ந்த அனுதி குணசேகர தகுதி பெற்றுள்ளார்.
அனுதி இந்த சுற்றில் ஆசிய மற்றும் ஓசியானியா பிராந்தியத்தில் முதல் 5 பேருக்குள் தெரிவாகியுள்ளார்.
இவருடன் இந்த சுற்றில் ஆசிய மற்றும் ஓசியானியா பிராந்தியத்தில் இருந்து தாய்லாந்து, துருக்கி, லெபனான் மற்றும் ஜப்பான் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
74 ஆண்டு கால உலக அழகி போட்டி வரலாற்றில் Head-to-Head Challenge பிரிவில் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கை போட்டியாளராக அனுதி இடம்பிடித்துள்ளார்.
மேலும், அனுதியின் மற்றொரு தனித்துவமான வெற்றியாக, இந்த முறை உலக அழகி போட்டியில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டி பிரிவுகளிலும் இறுதி சுற்றுக்கு வந்த ஆசியாவின் ஒரே போட்டியாளராகவும் இவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அனுதி பங்கேற்கும் Head-to-Head Challenge பிரிவின் இறுதி 20 பேர் பங்கேற்கும் இறுதிப் போட்டி இன்று (23) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.