2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று (23) நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியானது பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை 33 ஓட்டங்களினால் தோற்கடித்து.
இந்த வெற்றியின் மூலமாக பிளேஆஃப் சுற்றினை தவறவிட்ட GT அணியானது தொடர்ச்சியான நான்கு தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 64 ஆவது போட்டியானது நேற்றிரவு 07.30 மணிக்கு அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற GT அணியானது முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை LSG அணிக்கு வழங்கியது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணியானது 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 235 ஓட்டங்களை குவித்தது.
ஆரம்ப வீரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் ஐடன் மார்க்ராம் ஆகியோரின் நல்லதொரு இணைப்பாட்டம் அணிக்கு இமாலய இலக்கினை நிர்ணயிக்க உதவியது.
இந்த இன்னிங்ஸில் மிட்செல் மார்ஷ் தனது முதல் ஐ.பி.எல். சதத்தை அடித்தார்.
மார்ஷ் வெறும் 62 பந்துகளில் 117 ஓட்டங்களை எடுத்தார்.
மறுபக்கம் ஐடன் மார்க்ராம் 24 பந்துகளில் 36 ஓட்டங்களை எடுத்தார்.
இவர்கள் தவிர நிக்கோலஸ் பூரன் 27 பந்துகளில் 56 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
236 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய GT அணியால் 20 ஓவர்களின் நிறைவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.
GT அணி சார்பில் ஷாருக் கான் சிறப்பாக செயல்பட்டு 29 பந்துகளில் 57 ஓட்டங்களை எடுத்தார்.
பந்து வீச்சில் LSG அணி சார்பில் வில் ஓ’ரூர்க் மூன்று விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் மற்றும் ஆயுஷ் படோனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக மிட்ஷெல் மார்ஸ் தெரிவானார்.