இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய அணித்தலைவராக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கான அணியை இன்று (24) இந்திய அணி அறிவித்துள்ளது.
புதிய அணித் தலைவராக சுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இந்திய அணித் தலைவராக இருந்த ரோஹித் சர்மா, டெஸ்ட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து அணித் தலவைர் வெற்றிடத்திற்கு சுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது அணித்தலைவர் பதவிக்காலம் அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது.
இதற்கிடையில், அணியின் துணைத் தலைவராக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.