ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவை எதிர்வரும் மே 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (24) கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கல்கிஸ்ஸ பதில் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று(23) அவரை
கைது செய்திருந்தனர்.
கடந்த 20 ஆம் திகதி வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 2 பெண்களிடம் இருந்து குறித்த துப்பாக்கி மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதனடிப்படையிலேயே, தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கியுடன் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் , முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமது சமையல்காரரின் மூலம் அந்தத் துப்பாக்கியை ஹெவ்லோக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தமது நண்பரின் வீட்டுக்கு அனுப்பியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.