ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் மூன்று தொகுதி அமைப்பாளர்கள் பதவி விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, மாத்தளை பிரதான அமைப்பாளராக செயற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த அளுவிஹார, ரத்தோட்டை தொகுதி அமைப்பாளராக இருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அளுவிஹார, மற்றும் தம்புள்ளை அமைப்பாளராக செயற்பட்ட முன்னாள் மாகாண அமைச்சர் சம்பிக விஜேரத்ன ஆகிய மூவரும் அந்த பதவிகளிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நேற்று(23) ஐக்கிய மக்கள் சக்தியின் பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகுவதாக தெரிவித்து ராஜினாமா கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.