பூமி உள்ளே புதையலை மறைத்து வைத்திருக்கிறது என்ற கருத்து பல காலமாக மக்களைக் கவர்ந்து வருகிறது.
பூமியின் மையப்பகுதிதான் கிரகத்தின் தங்கத்தின் மிகப்பெரிய களஞ்சியமாகும்.
ஆம், நாம் பயன்படுத்தப்படாத உலோகத்தின் ஒரு பெரிய இருப்பு பூமியின் மையப்பகுதிக்குள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், புதிய பகுப்பாய்வு அது மேற்பரப்பை நோக்கி கசிந்து வருவதாகக் கூறுகிறது.
பூமியின் தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்களின் 99.999% க்கும் அதிகமானவை 3,000 கி.மீ திடமான பாறையின் கீழ் புதைந்து கிடக்கின்றன.
அவை பூமியின் உலோக மையத்திற்குள் உள்ளன.
மேலும், மனிதகுலத்தின் எட்டாத தூரத்தில் உள்ளன என்று ஆய்வாளர்களின் அண்மைய கண்டுபிடிப்பு கூறுகின்றது.
கோட்டிங்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஹவாய் தீவுகளில் உள்ள எரிமலைப் பாறைகளில் ருத்தேனியம் (Ru) தடயங்களைக் கண்டறிந்தனர், அவை இறுதியில் பூமியின் மையத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.