போலந்தின் ஜனாதிபதித் தேர்தலில் தேசியவாத எதிர்க்கட்சி வேட்பாளர் கரோல் நவ்ரோக்கி (Karol Nawrocki) மிகக் குறுகிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக திங்களன்று (02) அந் நாட்டு தேசிய தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் கூடிய தீவிர பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த நவ்ரோக்கி, வார்சாவின் தாராளவாத மேயர் ரஃபால் ட்ர்சாஸ்கோவ்ஸ்கியை எதிர்த்து நடந்த இரண்டாம் சுற்றில் 50.89 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அதேநேரம், ரஃபால் ட்ர்சாஸ்கோவ்ஸ்கி 49.11 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
இதனிடையே போலந்தின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவ்ரோக்கி, போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்கின் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு திட்டத்தைத் தடுக்க தனது ஜனாதிபதி வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தொடர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.