பேலியகொடை பகுதியில் களனி முகாமைச் சேர்ந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (01) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது கைதான நபர் வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.
இதன்போது, 3 வாள்கள், 10 தடை செய்யப்பட்ட கத்திகள் உட்பட பல கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரும் மீட்கப்பட்ட ஆயுதங்களும் பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.