2025 மே 6 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை, அதன் முதல் அமர்வை எதிர்வரும் ஜூன் 16, அன்று கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அசாதாரண வர்த்தமானியை மேல் மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆணையாளர் சாரங்கிகா ஜெயசுந்தர வெளியிட்டுள்ளார்.
ஆணையர் வெளியிட்ட வர்த்தமானியின்படி, முதல் அமர்வு 2025 ஜூன் 16 ஆம் திகதி காலை 9:30 மணிக்கு தொடங்கும்.
நகர மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தின் போது, புதிய மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்ந்தெடுப்பது முதல் அலுவல் முறையாக நடைபெறும்.
உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து எந்தக் கட்சிக்கும் முழுமையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.
எனவே தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகிய இரண்டும் அண்மைய நாட்களில் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கு பிற அரசியல் பிரிவுகளின் ஆதரவைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளன.
இதற்கிடையில், மேல் மாகாண உள்ளூராட்சித் திணைக்கள ஆணையாளரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின்படி, மேலும் 20 உள்ளூராட்சி நிறுவனங்களின் தொடக்க அமர்வும் ஜூன் மாதத்தில் நடைபெறும்.