முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஜூலை 07 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில், கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின் (ஊழியர்களை சட்டவிரோதமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்திகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.