இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) புதன்கிழமை (04) அறிவித்தது.
இந்தப் போட்டி ஜூன் 17 ஆம் திகதி காலியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வலது கை வீரர் எபாடோட் ஹொசைன் தசைநார் காயம் தொடர்பான அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
ஜூலை 2023 இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பங்களாதேஷ ஒருநாள் போட்டியின் போது வலது கை வேகப்பந்து வீச்சாளருக்கு காயம் ஏற்பட்டது.
இதுவே அவரது கடைசி சர்வதேச போட்டியாகவும் அமைந்தது.
அவரைத் தவிர, சிம்பாப்வேக்கு எதிரான தொடரின் போது ஓய்வு வழங்கப்பட்ட பின்னர், டி:20ஐ அணித் தலைவர் லிட்டன் தாஸும் டெஸ்ட் அணிக்குத் திரும்பினார்.
இதற்கிடையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து மஹ்முதுல் ஹசன் ஜோய், தன்வீர் இஸ்லாம் மற்றும் தன்சிம் ஹசன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமட் சரியான நேரத்தில் குணமடையத் தவறிவிட்டார்.
ஜூன் 17 முதல் 29 வரை காலி மற்றும் கொழும்பில் நடைபெறவிருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இரு அணிகளின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சீசன் முறையாகத் தொடங்கும்.
குறிப்பாக, இது 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை திட்டமிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே சொந்த மண்ணில் தொடராகும்.
டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20ஐ தொடரில் விளையாடும்.
மூன்று ஒருநாள் போட்டிகளும் பகல்-இரவு ஆட்டங்களாக ஜூலை 2 முதல் 8 வரை முறையே கொழும்பு, மற்றும் பல்லேகேலில் நடைபெறும்.
மூன்று போட்டிகள் கொண்ட டி20ஐ தொடர் ஜூலை 10 முதல் 16 வரை பல்லேகேல், தம்புல்லா மற்றும் கொழும்பில் நடைபெறும்.