கொழும்பு, மட்டக்குளி பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்குளி, சமிதபுர பகுதியில் 34 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் துப்பாக்கி மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிக்கு மேலதிகமாக 10 தோட்டாக்கள், 12.5 கிராம் ஹெரோயின் என்பனவும் மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.