வீரகெட்டிய பகுதியில் 110.46 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திங்கட்கிழமை மேற்கொண்ட விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் வீரகெட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்களை அடையாளம் காண மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான நாடு தழுவிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், இது பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் கீழ் நடத்தப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.