ஆமதாபாத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தினால் நடத்தப்படும் 10 மற்றும் 12 ஆம் தர பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வினை ஆரம்பிப்பதற்கு முன்னர் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய், ‘குஜராத் ஆகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. சில வீடியோக்கள்,போட்டோக்களை பார்க்கும்போது மனம் பதறுகிறது.. அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை’ எனத் தெரிவித்திருந்தார்.
இதேவேளை தன்னை மக்கள் ”இளைய காமராஜர் ”என அழைக்க வேண்டாம் எனவும் விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.