நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன், டி:20 கிரிக்கெட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்து உலக சாதனையை முறியடித்தார்.
மேஜர் லீக் கிரிக்கெட்டில் (MLC) சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்காக விளையாடும் ஆலன், வெள்ளிக்கிழமை (13) ஓக்லாண்ட் கொலிசியத்தில் நடந்த வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிரான சீசனின் தொடக்க ஆட்டத்தில் 19 சிக்ஸர்களை அடித்து இந்த சாதனையை படைத்தார்.
கிறிஸ் கெய்ல் மற்றும் எஸ்டோனியாவின் சாஹில் சவுகான் ஆகியோரின் முந்தைய சாதனையான 18 சிக்ஸர்களை அவர் இந்த இன்னிங்ஸில் முறியடித்தார்.
போட்டியில் வாஷிங்டனின் பந்து வீச்சாளர்களுக்கு பேரழிவை ஏற்படுத்திய ஆலன் அதேவேளை, தனது 19 ஆவது சிக்ஸருடன் வெறும் 49 பந்துகளில் 150 ஓட்டங்களை எடுத்தார்.
இது டி:20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக 150 ஓட்டங்களாக அமைந்தது.
இறுதியில் அவர் 51 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 151 ஓட்டங்களை எடுத்தார்.
அவர் 296.08 ஸ்ட்ரைக் ரேட்டில் துடுப்பாட்டம் செய்தார்.