ஈரான் 100 க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை இஸ்ரேல் நோக்கி ஏவியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை வெள்ளிக்கிழமை (13) காலை தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டத்தை குறிவைத்து ஆபரேஷன் ரைசிங் லயன் தொடங்கியதை அடுத்து பிராந்திய பதட்டங்களில் ஒரு பெரிய அதிகரிப்பைக் குறிக்கும் வகையில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு படையின் அண்மைய அறிவிப்பில்,
ஈரானால் ஏவப்பட்ட ட்ரோன்கள் வரும் மணிநேரங்களில் இஸ்ரேலை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும், இஸ்ரேலிய விமானப்படை அவற்றைத் தடுக்க முயற்சியில் உள்ளது.
இத்தகைய ட்ரோன்கள் பொதுவாக ஈரானில் இருந்து இஸ்ரேலை அடைய ஏழு மணிநேரம் வரை ஆகும்.
ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஈராக் மீது பல ட்ரோன்கள் காணப்பட்டன – என்று கூறியுள்ளது.