நேற்யை தினம் அகமதாபாத்தில் 242 பேருடன் பயணித்த எயார் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவரைத் தவிர ஏனைய 241 பேரும் உயிரிழந்தனர்.
குறித்த விபத்தானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்று மற்றுமொரு எயார் இந்தியா விமானமும் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து ஃபூகெட்டில் இருந்து இன்று காலை 9:30 மணிக்கு இந்தியத் தலைநகர் டெல்லி நோக்கி 156 பயணிகளுடன் புறப்பட்ட AI 379 என்ற விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறங்கக் கோரியதாக ஃபூகெட் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து குறித்த விமானம் அந்தமான் கடலைச் சுற்றி வந்து பின்னர் மீண்டும் தாய் தீவில் தரையிறங்கியதாக விமான கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இடம்பெற்ற தேடுதலில் குறித்த விமானத்தில் இருந்து எவ்விதமாக வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.