விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜூன் 22ஆம் திகதி விஜய் தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளதால் அன்றைய தினம் ‘ஜனநாயகன்’ படத்தின் டீஸரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’, விஜய், பாபி தியோல், பூஹா ஹெக்டே, கவுதம் மேனன், ப்ரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்.
இது விஜய்யின் நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்பதால், இதன் உரிமைகளை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியாக இதன் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம், தொலைக்காட்சி உரிமையினை சன் டிவி ஆகியவை கைப்பற்றி இருந்தமை குறிப்பிடதத்க்கது.