முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மனு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, கெஹெலிய ரம்புக்வெல்ல வெகுசன ஊடக அமைச்சராகப் பதவி வகித்த போது தனது தனிப்பட்ட கையடக்க தொலைபேசியின் 240,000 ரூபாய் கட்டணத்தை அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் நிதியிலிருந்து செலுத்தி அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.