ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரும் எழுதுவினைஞர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இவர்கள் மூன்றாம் தரப்பினர் மூலம் அதிக விலைக்கு மருந்துகளை விற்றுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.