அகமதாபாத்தில் விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் இடிபாடுகளுக்கு இடையிலிருந்து கிடைத்த 100 பவுனுக்கும் மேற்பட்ட தங்க நகைகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ம் திகதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அடுத்த சில நிமிடங்களில் அருகில் இருந்து பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியதில் அதில் பயணம் செய்தவர்கள், விடுதியில் இருந்த மாணவர்கள், பொதுமக்கள் என மொத்தம் 279 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குறித்த விபத்தினையடுத்து சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து சுமார் 100 கிராம் தங்க நகைகள்,உட்பட பயணிகளின் உடமைகள் பலவற்றை மீட்புப் படையினர் மீட்டனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட அனைத்து உடைமைகளும் ஆவணப்படுத்தப்பட்டு வருவதாகவும்,அவை நெருங்கிய உறவினர்களிடம் விரைவில் திருப்பித் தரப்படும் என்றும் உட்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.