சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) அழைப்பின் பேரில், சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, சீன வெளிவிவகார அமைச்சர் லியு ஜியான்சாவோவை சந்தித்து கலந்துரையாடினர்.
பெய்ஜிங்கில் உள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறை தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இதில் சீனாவின் பதில் வெளிவிவகார அமைச்சர் சன் ஹையான் உட்பட பல உயர்மட்ட சீன அதிகாரிகள் பங்கேற்றனர்.
சீன வெளியுறவு அமைச்சர் லியு ஜியான்சாவ், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஜேவிபிக்கும் இடையிலான நீண்டகால நட்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இது பிரிக்கவோ அல்லது குறைமதிப்பிற்கு உட்படுத்தவோ முடியாத ஒரு பிணைப்பு என்று கூறினார்.
நாட்டின் இறையாண்மையை மதிக்கும் அதே வேளையில் இலங்கையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க சீனா தயாராக இருப்பதாகவும், சீனா மற்ற நாடுகளின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த விஜயமானது இரு கட்சிகளுக்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று டில்வின் சில்வா இதன்போது குறிப்பிட்டார்.
இலங்கைக்கு சீனா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு அவர் நன்றி தெரிவித்ததோடு, நாடுகளுக்கு இடையே உருவாகியுள்ள பரஸ்பர புரிதலை ஜே.வி.பி மதிக்கிறது என்றும் கூறினார்.
தலைவர் மாவோ சேதுங்கின் சகாப்தத்திலிருந்து ஜனாதிபதி ஜி ஜின்பிங் வரையிலான சீனாவின் வளர்ச்சிப் பயணம் குறித்த தூதுக்குழுவின் நேர்மறையான பதிவுகளையும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் பகிர்ந்து கொண்டார்
மார்க்சியக் கொள்கைகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தனித்துவமான முன்னேற்றத்தை ஒப்புக்கொண்டார்.