போலி இந்திய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்த இலங்கையைச் சேர்ந்த தாயும் மகளும் சென்னையில் திங்கள்கிழமை (14) கைது செய்யப்பட்டனர்.
திங்கட்கிழமை இரவு கொழும்பிலிருந்து சென்றடைந்த பயணிகளின் ஆவணங்களை குடிவரவு அதிகாரிகள் சரிபார்த்தபோது, 48 வயதுடைய ஒரு பெண்ணும் அவரது 21 வயது மகளும் சென்னை முகவரியுடன் கூடிய இந்திய கடவுச்சீட்டுகளை வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்ததாக இருவரும் கூறினர்.
சந்தேகத்தின் பேரில், இருவரும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.
அதன் பிறகு, இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் அடையாளச் சான்றுகளைப் பெற அவர்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும் போலி இந்திய கடவுச்சீட்டுகளையும் பயன்படுத்தியுள்ளனர்.
விமான நிலைய அதிகாரிகள் இருவரையும் கைது செய்து சென்னையில் உள்ள சி.சி.பி.யிடம் ஒப்படைத்தனர்.
போலி கடவுச்சீட்டுகளை பெற உதவிய நபர் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.



















