அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவ தளபதி ஆசிம் முனிர் இன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
வெள்ளைமாளிகையில் குறித்த சந்திப்பு இடம்பெறுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆசிம் முனிருக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மதிய விருந்து அளிக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற ட்ரம்ப் மாநாடு நிறைவடைவதற்குள் அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – பாகிஸ்தான் மோதலை நான் தான் நிறுத்தினேன் என்று ட்ரம்ப் தொடர்ந்து கூறிவரும் நிலையில் பாகிஸ்தான் இராணுவ தளபதியின் அமெரிக்க பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.