கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 247 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
பங்களாதேஷ் அணி சார்பில் அதிகபடியாக ஷத்மான் இஸ்லாம் 46 ஓட்டங்களையும், முஷ்ஃபிகுர் ரஹீம் 35 ஓட்டங்களையும் மற்றும் லிட்டன் தாஸ் 34 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அசிதா பெர்னாண்டோ மற்றும் சோனல் தினுஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் மற்றும் தரிந்து ரத்நாயக்க ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸுக்காக இலங்கை அணி தற்சமயம் துடுப்பெடுத்தாடி வருகிறது.



















