தந்திரோபாய அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட F-35A போர் விமானங்களை வாங்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.
இது “ஒரு தலைமுறையில் இங்கிலாந்தின் அணுசக்தி நிலைப்பாட்டை மிகப்பெரிய அளவில் வலுப்படுத்துவதாக” அமையும் என இங்கிலாந்தின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பனிப்போர் முடிவடைந்த பின்னர் முதல் முறையாக இங்கிலாந்தின் விமானப்படை அணு ஆயுதங்களை ஏந்திச் செல்ல அனுமதிக்கும் இந்த கொள்முதல் குறித்து ஸ்டார்மர் கடந்த புதன்கிழமை ஹேக்கில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் இது குறித்து கலந்துரையாடியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.