அனுராதபுரம் – திரப்பனை கல்குலம பகுதியில் கடந்த 26 ஆம் திகதி இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரின் நண்பர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
அனுராதபுரம், திரப்பனை கல்குலம பகுதியில் கடந்த 26 ஆம் திகதி இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்
28 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று பிற்பகல்(27) கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டபோது குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபரும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் நண்பர்கள் எனவும், போதைப்பொருள் தொடர்பாக அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, காயமடைந்த நபர் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அனுராதபுரத்தின் சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 29 முதல் 31 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.















