இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தலைமை நீதிபதி தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, இன்று (01) சிறை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையிலேயே குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.















