கடந்த ஜூலை 3 ஆம் திகதி கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார், மற்றுமொருவர் காயமடைந்தார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கி சூடு தொடர்பில் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கந்தானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர்கள் 25 மற்றும் 26 வயதுடையவர்கள் ஆவார்.
ஜூலை 03 ஆம் திகதி கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, காயமடைந்த நபர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது ஒருவர் உயிரிழந்தார்.














