இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க நாளை (10) ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் அணியுடனான டி:20 தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மூன்று போட்டிகள் கொண்ட டி:20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காயம் தொடர்பான ஹசரங்கவின் MRI அறிக்கை இன்னும் நிலுவையில் இருந்தாலும் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அவர் பங்கெடுத்தார்.
8.4 ஓவர்களுக்குப் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட அவர் 35 ஓட்டங்களை வழங்கி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
அவர் இல்லாதது பங்களாதேஷுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் 2:1 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கை அணிக்கு பெரும் அடியாக இருக்கும்.
இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரின் முதல் போட்டி நாளை இரவு 07.00 மணிக்கு கண்டி, பல்லேகலயில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
















