குஜராத்தின் வதோதராவில் வதோதரா மற்றும் ஆனந்த் நகரங்களை இணைக்கும் காம்பிரா பாலம் இன்று (10) காலை இடிந்து விழ்ந்துள்ளது.
இதன்போது, பாலத்தில் பயணித்த 05 வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
அதேநேரத்தில் பலர் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கம்பீரா பாலம் கடந்த ஆண்டுதான் பழுதுபார்க்கப்பட்டதாகவும், பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு மாநில முதலமைச்சர் ரூ.212 கோடி மதிப்பிலான புதிய பாலத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
எவ்வாறெனினும், விபத்தின் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுக்கள் மீட்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
வதோதரா மாவட்டத்தின் பத்ராவில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்து விழுந்ததை சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் காட்டுகின்றன.



















