எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் தொடருக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்தியாவின் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கண்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை-ஆகஸ்டில் நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர் ஒத்திவைப்பு, இலங்கைக்கான போட்டி அட்டவணையில் இடைவேளையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
போட்டிக்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் செய்யப்படவில்லை.
எனினும், இரு கிரிக்கெட் வாரியங்களும் ஒரு குறுகிய இருதரப்பு தொடரின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
ஒருவேளை இந்த சுற்றுப் பயணம் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளைக் கொண்டதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இலங்கை ஆகஸ்ட் மாத இறுதியில் சிம்பாப்வேக்கு புறப்பட உள்ளது.
அங்கு போட்டிகள் ஆகஸ்ட் 29 அன்று முதல் ஆரம்பமாகிறது.
இரு அணிகளும் இறுதியாக 2023 ஜூலை மாதம் இலங்கையில் நேருக்கு நேர் மோதின.
அங்கு இந்தியா டி20 தொடரை வென்றது, இலங்கை ஒருநாள் தொடரை வென்றது.















