நாட்டில் பாரியளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் (Wutler) தெரிவித்துள்ளார்.
இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்
இதன்போது ”இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 922 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 1,386 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 56 ரக துப்பாக்கிகள் 23 கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.















