அமெரிக்கா இந்தோனேசியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் கடுமையான வரிகளைத் தவிர்ப்பதற்கான தென்கிழக்கு ஆசிய நாட்டின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்குள் நுழையும் இந்தோனேசியப் பொருட்களுக்கு 19 சதவீத வரி விதிக்கிறது என்று ட்ரம்ப் தனது சமூக ஊடகத்தளத்தில் பதவிட்டார்.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுடன் ட்ரம்ப் பேசிய பின்னர் இறுதி செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், அதிக வரிகளைத் தவிர்ப்பதற்காக மாற்றப்பட்ட பொருட்கள் கடுமையான வரிகளைச் சந்திக்க நேரிடும்.
கடந்த சில மாதங்களில் தனது மிகவும் அதிகபடியான கட்டணத் திட்டங்களை நிறுத்தி வைத்த பின்னர், இந்த மாதம் ட்ரம்ப் தனது அச்சுறுத்தல்களை மீண்டும் புதுப்பித்தார்.
ஆகஸ்ட் 1 முதல் அதிக கட்டணங்களை வசூலிக்கத் தொடங்க திட்டமிட்டுள்ள பல நாடுகளுக்கு எச்சரிக்கை கடிதங்களை அனுப்பினார்.
ஐரோப்பிய ஒன்றியம், கனடா, மெக்சிகோ, ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகள் அனைவரையும் அவரது இலக்குகள் உள்ளடக்கியிருந்தன.
இந்தோனேசியாவும் கடந்த வாரம் தனது பொருட்களுக்கு 32% வரி விதிக்கும் திட்டங்களை கோடிட்டுக் காட்டும் ஒரு கடிதத்தைப் பெற்றது.
எவ்வாறெனினும், இந்தோனேசிய ஜனாதிபதியுடன் செவ்வாயன்று (15) தொலைபேசியில் பேசிய பின்னர் ட்ரம்ப், அந்த விகிதத்தைக் குறைப்பதாக கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் பொருட்களுக்கான வர்த்தக வரிகளைக் குறைக்க இந்தோனேசியா ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.















