பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் பெய்த கனமழையால்
அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதில் 3 வீடுகள் இடிந்து விழுந்ததுடன் இடிபாடு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 116 பேர் உயிரிழந்ததுடன் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் 08பேர் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) ஜூன் 26 முதல் நாடு முழுவதும் 63 குழந்தைகள் உட்பட மொத்தம் 124 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்றையதினம் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.



















