ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதானவை ஓகஸ்ட் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்று (20) மத்துகம நீதவான் அசங்க ஹெட்டியாவத்த முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வாகனமொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டார் .
சட்டவிரோதமாக வாகனம் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக மத்துகம பொலிஸார் தெரிவித்திருந்தனர்
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் விசாரணை நிமித்தம் மத்துகம பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மத்துகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளிடம் இருந்தே தாம் இந்த வாகனத்தினை கொள்வனவு செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த ஜீப் வாகனத்தினை விற்பனை செய்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளை தேடி பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.














