பங்களாதேஷ் விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பங்களாதேஷின் விமானப்படைக்கு சொந்தமான F-7 BGI எனும் பயிற்சி விமானம் ஒன்று தலைநகர் டாக்காவின் வடக்குப் பகுதியான உத்தராவில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரி வளாகத்தில் இன்று விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு இராணுவ மக்கள் தொடர்புத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, நால்வர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
















